இனிமேல் தான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்…மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும்: வெளியான பகீர் தகவல்..!!

23 April 2021, 3:48 pm
corona - updatenews360
Quick Share

சென்னை:அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டால் நேரடியாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கவும், சிறு அறிகுறி இருந்தால் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, கூட்ட நெரிசலை தவிர்க்க தீவிர அறிகுறி இருந்தால் மட்டும் முக்கிய 4 அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருந்தாலோ உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். முடியாதவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்களுக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுக்கு அனைத்துவிதமான பரிசோதனையும் எடுக்கப்படும்.

சென்னையில் 4 நாட்கள் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவல் குறைந்துவிடும். கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Views: - 264

0

0