அமெரிக்க மக்களுக்கு நேற்றிரவு முதல் தீபாவளி தொடங்கியது : ப.சிதம்பரம் ட்வீட்!!

8 November 2020, 10:47 am
P Chidambaram - Updatenews360
Quick Share

அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு தீபாவளி தொடங்கியுள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்ரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் ஜோபிடன் தலைமையிலான கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்க அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகி உள்ளனர்.

இந்த நிலையில் அதிபர், துணை அதிபருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதனிடையே தேர்தல் வெற்றி தொடர்பாக ப.சிதம்பரம் டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த பதிவில், அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது என்றும், ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது, அநத் வாராது போல் வந்த மமணியை ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 31

0

0