கொத்து கொத்தாக செத்துக் கிடந்த செந்நாய்கள் : விஷம் வைக்கப்பட்டதா? என விசாரணை

10 September 2020, 3:46 pm
Ooty Dhole- updatenews360
Quick Share

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகம் அருகே அரியவகை பட்டியலிலுள்ள நான்கு செந்நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதியில் புலி , சிறுத்தை, கரடி, அரியவகை செந்நாய் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப் பகுதியான பொக்காபுரம் வனப்பகுதியில் நான்கு செந்நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன .இதைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் இறந்த செந்நாய்களுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த செந்நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Views: - 8

0

0