முதல்முறையாக முதலமைச்சர் அரியணையில் ஸ்டாலின் : பட்டாசு வெடித்து கொண்டாடும் திமுக தொண்டர்கள்..!!

7 May 2021, 10:42 am
dmk celebration- updatenewsw360
Quick Share

திமுக : தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் திமுக ஆறாவது முறையாக ஆட்சியை அமைக்கிறது. 10 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் முதலமைச்சராக திமுகவில் இருந்து ஒருவர் பதவியேற்றது மதுரை மக்கள் மற்றும் மதுரையில் உள்ள திமுகவின் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினர் திமுக தொண்டர்கள். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 165

0

0