சத்தியமங்கலத்தில் ஓட்டல் ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் : ஹார்டிஸ்க்கை எடுத்து அராஜகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 10:21 am
Dmk Hotel Issue -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் உள்ள உணவகத்தில் உணவு அருந்த வந்த திமுகவினர் உணவு பரிமாறிக் கொண்டிருந்த நபரை தாக்கியதோடு அதை மறைக்க அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்கை எடுத்து சென்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் திமுகவினரின் அட்டகாசம் அதிகரித்து வந்த நிலையில் தேர்தல் நேரத்தில் கூட அவர்கள் செய்யும் சேட்டைகளை விட்டுவைக்கவில்லை. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பீமன்ஸ் ரெஸ்டாரன்ட் என்ற தனியார் உணவகம் இயங்கி வருகிறது.

இங்கு நேற்று இரவு தன் மகனோடு உணவருந்த வந்த திமுகவை சேர்ந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ உணவை ஆர்டர் செய்துள்ளார். சிறிது கூட்டம் காரணமாக உணவு வர தாமதம் ஏற்படவே அங்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவரை அழைத்து தகாத வார்த்தையில் பேசி அவரை தாக்கியுள்ளார்.

அப்போது தாக்குதலை தட்டி கேட்க வந்த உணவகத்தின் உரிமையாளரையும் அங்கு வந்த திமுகவினர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் என்பதை அறிந்துகொண்ட திமுகவினர் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சேதம் செய்து விட்டு சிசிடிவி காட்சிகள் பதிவாகவும் ஹார்ட்டிஸ்க் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அமைதியோடு இருந்தும் திமுகவினர் ஆங்காங்கே அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் மக்களின் கதி அதோகதிதான்.

Views: - 109

0

0