கொலை செய்து விடுவதாக திமுகவினர் மிரட்டல் : உயிரை காப்பாற்ற கோரி ஆட்சியரிடம் மண்டியிட்டு விவசாயி புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 4:21 pm
Farmer Complaint - Updatenews360
Quick Share

பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மண்டியிட்ட விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

மாதந்தோறும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் DRO தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்து வருகின்றனர். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அப்போது பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணண் என்பவர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பத்தலப்பள்ளி மலட்டாறு மற்றும் மலை பகுதிகளில் திமுக பிரமுகர் ராஜமார்த்தாண்டம் என்பவர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் இதனால் விவசாயம் பாதிக்கிறது என அதிகாரிகளிடம் மனு அளித்ததால் என்னை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார்.

இது குறித்து SP அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை நான் தனியாக வீட்டில் வசித்து வருகிறேன். எனது உயிருக்கு அச்சுருத்தல் உள்ளது என்னை காப்பாற்றுங்கள் என கூறி ஆட்சியரிடம் மண்டியிடு (கீழே படுத்து) கோரிக்கை வைத்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதில் அளித்தார்.

Views: - 538

0

0