வேளாண் மசோதாவை எதிர்த்து திமுக நடத்திய போராட்டம் படுதோல்வி: பொன்.ராதாகிருஷ்ணன் !!

28 September 2020, 6:47 pm
Pon Radha - updatenews360
Quick Share

தூத்துக்குடி : தமிழகத்தில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டம் தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக கூட்டணி நடத்திய போராட்டத்தில் 150 பேர் கூட வரவில்லை, இந்த நிலையில் நாடு பற்றி எரிகிறது என்று கூறுகிறார். தமிழகத்தில் பாஜக வளர்வதைக் கண்டு திமுக வயிற்றில் அடி பற்றி எரிகிறது.

திமுக பொருத்தவரை சர்வமும் ஒரு ஜான் தான். வேளாண் சட்டத்தினை எதிர்த்து திமுகவினர் நடத்திய போராட்டம் தோல்வி அடைந்துள்ளது. 15 கட்சிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் 100 பேர் கூட வரவில்லை. மக்கள் இன்றைக்கு எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டனர்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும், வறுமையில் வாடும் விவசாயிகளின் நிலையை மாற்றி வளம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். அதற்கு என்ன மாற்றங்கள் கொண்டு வந்தால் சரியாக இருக்குமோ, அதற்காக குழுவை நியமித்து, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு.இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர்.

விவசாயிகள் வைத்து அரசியல் நடத்த விரும்புகிறார்களோ அவர்கள் சட்டத்தை எதிர்க்கின்றனர், டெல்லியில் தமிழக விவசாயிகளை நிர்வாணமாக ஓடச் செய்து கேவலப்படுத்தி, அசிங்கபடுத்தியது திமுக என்றும், தமிழர்கள் என்றோ விவசாயிகள் என்றோ பார்க்காமல் அரசியல் ஆதாயத்திற்காக யாரை வேண்டுமானாலும் நிர்வாணப்படுத்தி ஓட விடுவார்கள்.

டெல்லியில் விவசாயிகள் நிர்வாணமாக ஓடுவதற்கு முன் பெண்களை நிர்வாணமாக ஓடச் செய்வதற்கு முயற்சி செய்தனர். நான் அவர்களிடம் இது போன்று செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.விவசாயிகளை கொச்சைப்படுத்தியக்கூடியது திமுக கூட்டணி, அவர்கள் கூறுவதை பொருட்டாக எடுத்துக்கொள்ள கூடாது.

விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய வேளாண் சட்டம் குறித்து விவசாயிகளுக்கு முழு விபரங்கள் தெரிய வரும் போது விவசாயிகள் முழுமையாக வரவேற்பார்கள் என்றார்.

பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவிலான பொறுப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு

பதவிக்கு முக்கியத்துவம் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது.பாரதிய ஜனதா கட்சியினர் நாங்கள் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தமிழகத்தில் பாஜக கட்சியை ஆளும் கட்சியாக கொண்டுவரக்கூடிய பணி எங்கள் பணி,அதற்கான முன்னெடுப்பை நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.அது நிச்சயமாக நல்ல முறையில் நடக்கும் என்றார்

அதிமுக செயற்குழுவில் நடந்தவைகள் பற்றி கேட்டபோது அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அது அவர்களுடைய பிரச்சனை, அவர்கள் முடிவு செய்வார்கள், அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றார்

Views: - 8

0

0