9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!

25 January 2021, 11:33 am
Minister Sengottayan - Updatenews360
Quick Share

ஈரோடு : 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கூறினார்.

மேலும் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு படிப்படியாக பணிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் ஆர்வமுடன் வருவதாகவும் கூறினார்.

இதே போல 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என கூறினார்.

Views: - 9

0

0