15 அடி ஆழ தொட்டியில் சுருண்டு விழுந்த ஊழியர் : போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!!

By: Udayachandran
13 October 2020, 2:17 pm
15 Feet - Updatenews360
Quick Share

மதுரை : கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்க சென்ற ஊழியர் ஒருவர் 15 அடி ஆழ தொட்டியில் மூச்சு திணறி சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள அம்பிகா கல்லூரி எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கட்டத்தில் தரை தளத்தில் 15 அடி ஆழத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதில் இன்று அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிம் என்பவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் சுருண்டு விழுந்துள்ளார்.

இதை பார்த்த சக ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டருடன் உதவியுடன் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உயிருக்கு போராடிய நபரை மீட்டு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தொட்டியில் விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 36

0

0