திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் முடக்கம்.! வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை..!

12 September 2020, 2:44 pm
DMK_MP_Jegathratchagan_UpdateNews360
Quick Share

முன்னாள் அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் 89 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதியின் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். கடந்த ஜூலை மாதத்தில் அமலாக்க இயக்குநரகம் அவரின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

இதில், ஜெகத்ரட்சகன் சென்னை குரோம்பேட்டையில் ரூ 65 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வாங்கியதாகவும், திமுக எம்.பி. மீது வழக்குத் தொடரப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த ஜெகத்ரட்சகன் அமலாக்கத்தித்துறை விசாரணைக்கு நான்கு வார இடைக்காலத் தடை வாங்கினார்.

இதற்கிடையே சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிமுறைகளை மீறி பங்குகள் வாகியததாக ஜெகத்ரட்சகன் மீது உள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், வெளிநாட்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகனின் 89.19 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Views: - 0

0

0