ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா! வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை!!

21 August 2020, 6:36 pm
Erode Collector Corona - Updatenews360
Quick Share

ஈரோடு : ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளதால் வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கொரோனா நோய் தொற்று காரணமாக இதுவரையில் 1804- பேர் பாதிக்கபட்டுள்ளனர். 993- பேர் வரையில் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

தற்போது பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவ மனையில் 782- பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுமையாக இதுவரையில் கொரோனா நோய் தொற்றுக்கு 29- பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் மாவட்ட ஆட்சியர் கதிரவன் மாவட்டம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகளை கண்காணித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மூன்று அமைச்சர் பங்கேற்ற விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.

இந்த பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0