கோவையில் பர்னிச்சர் கடையில் கொளுந்து விட்டு எரிந்த தீ : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்!!

21 January 2021, 2:16 pm
Cbe Fire - Updatenews360
Quick Share

கோவை : வடவள்ளி அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்தால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை வடவள்ளி போம்மணம்பலயம் பிரிவு லட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டுவரும் சோபா பர்னிச்சர் கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதானால் ஆங்கு உள்ள மர சாமன்கள், மெத்தைகள் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். சுமார் ஓரு மணி நேரத்திற்குமேல் அப்பகுதியில் தீயின் தாக்கம் நிடித்திருந்து.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வானில் கரும் புகை மண்டலத்தை கண்டவுடன் தீ அணைப்பு துறைக்கு தகவல் அளித்ததாக கூறினர்.

இந்த தீ விபத்தில உயிர் சேதம் எதுவுமில்லை, தீ விபத்துக் காரணம் குறித்து போலீசார் விசாரதணை மேற்கொண்டு வரகின்றனர். தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பதட்டதுடன் காணப்பட்டனர்.

Views: - 0

0

0