படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சோகம் : பதை பதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி!!

19 July 2021, 5:42 pm
Boat Acc Dead - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் கரை திரும்பி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைய முயலும் போது முகத்துவாரப்பகுதியில் மணல் மேடுகள் குவிந்து கிடப்பதால் அந்த பகுதியில் பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டு படகு கடலுக்குள் கவிழ்ந்தது.

இதில் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்டனி பிரிட்டின் என்ற மீனவர் மட்டும் படகின் அடிப்பகுதியில் சிக்கி நீந்தி வர முடியாமல் உயிரிழந்தார்.

இதனையடுத்து சக மீனவர்கள் உயிரிழந்த மீனவரை உடலை மீட்டு கரை கொண்டு வந்து குளச்சல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு படகுகள் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு படகு மட்டும் அலையில் சிக்கி கடலுக்குள் கவிழ்ந்தது. மற்றொன்று அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தது. இந்த காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது.

Views: - 192

0

0