இன்னைக்கும் உச்சம் தொட்ட தங்கம் விலை : நகை மீதான ஆசையே போயிடும் போல..!!

8 April 2021, 11:26 am
Gold Rate - Updatenews360
Quick Share

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல சரிந்து வந்த சவரன் தங்கத்தின் விலை, 33 ஆயிரம் முதல் 34 ஆயிரம் என ஏறி, இறங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.34,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.11 அதிகரித்து ரூ.4,345க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு அதிகரித்து ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 4

0

0

Leave a Reply