வெள்ளத்தை கடக்க முடியாமல் நின்ற அரசுப் பேருந்து : 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு!!

Author: Udayachandran
11 October 2020, 1:46 pm
Bus Strucks Flood - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் வெள்ளத்தை கடக்க முடியாமல் பயணிகளுடன் அரசு பேருந்து தவித்த காட்சி வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று கடம்பூர் அடுத்துள்ள குரும்பூர் பிரிவில் உள்ள சர்க்கரை பள்ளம் என்ற இடத்தில் பெரிய ஓடை ஒன்று செல்கிறது,.

மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் இந்த சக்கரை பள்ளத்தின் வழியாக தான் செல்வது வழக்கம். நேற்று திடீரென பெய்த கனமழையின் காரணமாக சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்நிலையில் அந்த கிராமத்திற்கு செல்லும் ஒரே ஒரு அரசு பேருந்து நேற்று வெள்ளத்தின் இடையே மாட்டிக் கொண்டு மறுகரையை சென்றடைய முடியாமல் எதிர்புறத்தில் அப்படியே நின்றது. இதனால் அந்த அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் நீண்ட நேரம் ஆற்றை கடக்க முடியாமல் தவித்தனர்.

அவ்வழியாக சென்ற மாடுகளும் தண்ணீரில் தத்தளித்தபடி மறுகரையை எட்டியது. இருசக்கர வாகனங்களில் வந்த அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் ஆற்றை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் ஆற்றை கடக்க முடியாமல் சுமார் 4 மணி நேரம் அரசு பேருந்து பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் காத்திருந்து பின்னர் தண்ணீரின் வேகம் குறைத்து பின்னரே ஆற்றை கடந்து சென்றனர்.

Views: - 43

0

0