சென்னை, சேலம், திருச்சி, மதுரை எல்லா ஏறு ஏறு..! தளர்வுகளை தொடர்ந்து கோவையில் தயார் நிலையில் அரசுப் பேருந்துகள்!!

3 July 2021, 1:09 pm
Express Bus - Updatenews360
Quick Share

கோவை : நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள்குக்கு அரசு பேருந்துகள் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தயாராகி வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணாமாக தமிழகம் முழுவதும் கடந்த மே மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களும் பொது தளர்வுகளை அறிவித்தார்.

அதன்படி வருகின்ற 5ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடருந்து அரசு பேருந்துகள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உக்கடம் கவுண்டம்பாளையம் சுங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து பேருந்துகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பேருந்துகளுக்கு உள்ளேயும் சுத்தம் செய்யப்பட்டு பழுது சரிபார்க்கப்பட்டு வருகிறது. பழுது நீக்கிய பேருந்துகளுக்கு சோதனையோட்டம் நடத்தப்படுகிறது.

Views: - 178

0

0