சிகிச்சையை சரியாக செய்யாத அரசு மருத்துவமனை.! தையல் பிரிந்த நிலையில் மீண்டும் அட்மிட்…

10 May 2021, 7:36 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பனியன் தொழிலாளி புகார் கூறியுள்ளார்.

திருப்பூர் – பல்லடம் சாலை, அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணி. பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, கீழே விழுந்ததில் இவரது இடது தோள்பட்டை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மணிக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ப்ளேட் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் இருந்த தையலை சரி வர பிரிக்காமல் வீட்டிற்கு அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் காயம் சரி வர ஆறாமல் பிரிந்து, பளேட் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து வலி தாளாத மணி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளியிடம் கேட்டபோது, இதுகுறித்து தனக்கு விவரம் எதுவும் தெரியவில்லை எனவும், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

Views: - 133

0

0