கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநரிடம் நலம் விசாரித்த குடியரசு தலைவர், பிரதமர்..!

3 August 2020, 4:03 pm
governor- updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக ஆளுநரிடம், குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரையில் 18 லட்சத்திற்கும் அதிமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த இரு தினங்களில் மட்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா என முக்கிய அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலாலை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0