பின்னணி பாடகர் வீரமணி ராஜுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு வழங்கி கவுரவிப்பு!!

14 January 2021, 5:50 pm
Quick Share

கேரளா : 2021ஆம் ஆண்டிற்கான ஹரிவராசனம் விருது தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பக்தி பாடகர் எம்ஆர் வீரமணி ராஜுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் கேரள அரசு இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இந்த வருடம் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பக்தி பாடகர் எம்ஆர் வீரமணி அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Veeramani raju Fan Club.... - Posts | Facebook

அந்த வகையில் சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசன தினமான இன்று நடைபெற்ற விழாவில் வீரமணி ராஜுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்தவிருதை வீரமணிக்கு வழங்கினார். மேலும் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இதில் தேவஸம்போர்டு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Views: - 12

0

0