அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் : ராதாகிருஷ்ணன்

14 April 2021, 1:19 pm
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரி தொற்று பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கி விட்டது. நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் ஊரடங்கு விதிப்பதற்கான சூழல் ஏதும் இல்லை. அடுத்த இரு வாரங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு வெண்டிலேட்டர்கள் இருப்பு உள்ளனர். முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து 2.39 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 28

0

0