தகாத உறவால் தறிகெட்ட குடும்பம்: தாயின் கள்ளக்காதலனை கொன்ற மகன்…திருப்பூரில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2021, 2:05 pm
tirupur Murder -Updatenews360
Quick Share

திருப்பூர் : தகாத உறவால் வாலிபர் கொலை செய்யப்பட்டு பாறை குழியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் அருகே கல்லாங்காடு பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தின் புகைப்படங்களை காவல் நிலையங்களுக்கு வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் திருப்பூர் கல்லூரி சாலையில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் மாயமாகி மூன்று நாட்கள் ஆனதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்திருந்தது.

அதே பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஏற்கனவே திருமணமாகி மகனுடன் வசித்து வரக்கூடிய பெண்ணுடன் சந்தோஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக கல்லூரி சாலையில் உள்ள சந்தோஷ் குமாரின் வீட்டிற்கு சென்ற அப்பெண்ணின் மகன் ஆரோக்கியதாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர், சந்தோஷ் குமாரை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் திருப்பூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு முருகேஷ்வரி தனது மகன் ஆரோக்கிய தாசுடன் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முருகேஷ்வரியிடம் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஒரே பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த முருகேஷ்வரி சந்தோஷ்குமாரிடம் அவ்வப்போது பணம் கேட்பாராம். இதையடுத்து பணம் கொடுக்கல் வாங்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சந்தோஷ் குமார், முருகேஷ்வரியுடன் அவ்வப்போது சந்தோஷமாக இருந்துள்ளார்.

மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் முருகேஸ்வரியின் வீட்டுக்கு வரும் சந்தோஷ் மது அருந்திவிட்டு முருகேஷ்வரியை வக்கிரமாக பயன்படுத்தியுள்ளான். கை நீட்டி கடன் வாங்கியதால் முருகேஷ்வரி இதை பொறுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் கொடுத்த பணத்திற்கு வட்டி மேல் வட்டி போட்ட சந்தோஷ்குமார் பணத்தை தரும்படி முருகேஷ்வரிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார்.

சந்தோஷின் டார்ச்சரை தாங்க முடியாமல் வேறு வழியின்றி பாலியல் அத்துமீறல்களை தனது மகனிடம் முருகேஷ்வரி கூறியுள்ளார். இதையடுத்து சந்தோஷ் குமாரை பழி வாங்க திட்டமிட்ட மகன் ஆரோக்யதாஸ், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமாரை மது அருந்த அழைத்து சென்றுள்ளான். உடன் தனது நண்பனான பாலசுப்பிரமணியத்தையும் அழைத்து சென்றுள்ளான்.

போதை தலைக்கேறிய நிலையில், சந்தோஷ்குமாரை தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளான் ஆரோக்யதாஸ். அங்கு முருகேஷ்வரியும், மகன் மற்றும் நண்பர் ஆகியர் சந்தோஷ்மாரை தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை வீச, மீண்டும் பைக்கில் சடலத்துடன் ஆரோக்கியதாஸ் மற்றும் அவரது நண்பர் நகரை உலா வந்துள்ளனர். அப்போது கல்லாங்காடு பகுதிக்கு சென்ற அவர்கள் சடலத்தை வீசினால் அடையாளம் தெரிந்துவிடும் என்று, பெட்ரோல் ஊற்றி சடலத்தை எரித்துள்ளனர். இதையடுத்துதான் தனது தாய் முருகேஷ்வரியை அழைத்து கொண்டு தேனிக்கு சென்றுள்ளார் ஆரோக்கியதாஸ்.

அதன்பிறகு மூன்று நாட்களாக சந்தோஷ்குமாரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் பின்னலாடை நிறுவனம் மற்றும் திருவாரூரில் உள்ள சந்தோஷ்குமாரின் பெற்றோர்களும் தொடர்பு கொண்ட போது எந்தவித தொடர்பும் இல்லாததால் திருவாரூரில் இருந்து வந்த சந்தோஷ்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய நண்பர் அழைத்துச் சென்றது தெரியவந்தது .

இதனையடுத்து பாறைக்குழிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு எரிந்த நிலையில் இருந்த சந்தோஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தகாத உறவின் காரணமாக வாலிபர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 592

0

0