முகக்கவசத்துடன் சுதந்திர தின ஒத்திகை.! சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி.!!

12 August 2020, 10:08 am
Ind Day Rehearsal- Updatenews360
Quick Share

கோவை : 74வது சுதந்திர தின விழாவையொட்டி முகக்கவசத்துடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

கோவையில் வரும் 15-ம் தேதி நடக்கும் 74வது சுதந்திர தின விழாவையொட்டி காவல்துறையின் அணிவகுப்பு ஒத்திகையில் அனைத்து காவலர்களும் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.வரும் 15-ம் தேதி சுதந்திர தினவிழா வஉசி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தவிழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து சுதந்திர தினவிழா இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை போலீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.காவல் ஆணையாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமையில் ஒத்திகை தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நடைபெற்று வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து காவலர்களும் முக கவசம் அணிந்தும், ஒன்றரை அடி இடைவெளி விட்டும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தினம் வருவதையொட்டி வஉசி மைதானத்தில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அத்தோடு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.