பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம் : ஆர்.டி.ஓ நடவடிக்கை…

2 November 2020, 12:11 pm
Community Certificate - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் இவர்களுக்கு பல மாவட்டங்களில் சாதிச் சான்றிதழ்கள் உரிய முறையில் கிடைப்பதில்லை. இப்படியிருக்கச் சான்றிதழ்கள் கிடைக்காததால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதில் பழங்குடியின மாணவ மாணவிகளுக்குச் சிக்கல் ஏற்படுகிறது. இது அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் சாதிச் சான்றிதழ் வழங்க கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் மாணவ மாணவிகளுக்குச் சாதிச் சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்க ஆர்.டி.ஓ., சுரேஷ் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தினார்

இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தற்போது இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள 20 மலைகிராம பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆர்.டி.ஓ.,சுரேஷ் தலைமையிலான அரசு அதிகாரிகளின் முயற்சியில் இன்று மொத்தம் 139 சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Views: - 21

0

0