கோர்ட்டு போடுவது repeat-u, டீ குடிப்பது repeat-u… மாநாடு வசனத்தை பேசி முதல்வரை கிண்டல் செய்த ஜெயக்குமார்….!

Author: Udhayakumar Raman
29 November 2021, 10:53 pm
Quick Share

சென்னை: கோர்ட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு என மாநாடு சினிமா வசனத்தை வைத்து முதல்வர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனுக்கள் வழங்கப்படும் பணிகளை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறம் இடங்களில் அதிமுகவினர் எழுச்சியோடு விருப்பமனு அளித்து வருகின்றனர். இந்த எழுச்சியை பார்க்கும்போது அதிமுகவும், தோழமை கட்சிகளும் வெற்றி பெறும். இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியை வைத்து சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மழைநீர் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரப்படாமல் இருப்பதால் சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும், மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் ஒரு இடங்களில் ராட்சஷ இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றச்சாட்டினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின், கோர்ட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு, கோட்டு கழட்டுவது ரிப்பீட்டு என மாநாடு படத்தில் வரும் வசனம்போல முதல்வரை கிண்டலடித்தார். மேலும் இந்த ரிப்பீட்டு பணிகளையே முதல்வர் தொடர்ந்து செய்து வருவதாகவும், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்

Views: - 185

0

0