வாகனம் மோதி படுகாயமடைந்த கன்றுக்குட்டி : கண்கலங்க வைத்த தாய்ப்பசுவின் பாசப்போராட்டம்!!

Author: Babu Lakshmanan
10 August 2021, 11:40 am
kumari cow - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே வாகனம் மோதியதில் படுகாயமடைந்த கன்றுக்குட்டியைக் கண்டு துடிதுடித்துப் போன தாய்ப்பசுவின் பாசப்போராட்டம் பார்ப்போர் நெஞ்சை உருக்கியது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றிவருகின்றன. அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் செட்டிகுளம் ஜங்ஷன் அருகே ஒரு பசுவும், கன்றும் சாலையில் சுற்றி வந்துள்ளது. அப்போது, அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் அந்த கன்றுக்குட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த கன்றுகுட்டி எழுந்து நடக்க முடியாமல் சாலை விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த தாய் பசு தனது கன்றுக்குட்டியை சுற்றி சுற்றி வந்து கண்ணீர் விட்டது. அப்போது அந்த வழியாக வந்த கால்நடை மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த கன்றுகுட்டிக்கு மருத்துவ முதலுதவியை செய்தார்.

கன்றுக்குட்டிக்கு மருத்துவ உதவி செய்யும் போது, தாய்ப்பசு கண்ணீர்விட்டபடி கன்றுகுட்டியை சுற்றி சுற்றி வந்தது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இது பார்ப்போரின் நெஞ்சை உருகச் செய்தது.

6 அறிவு கொண்ட சில மனித மிருகங்கள் பாசம் என்பதை மறந்து, ஆதரவற்றோர் இல்லங்களில் மூத்தோர்களை கொண்டு சேர்த்து வரும் இந்த காலத்தில், தாய் – பிள்ளை பாசம் என்ன என்பதை உணர்த்தியுள்ளது இந்த வாயில்லா ஜீவன்கள்.

Views: - 520

0

0