குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Author: kavin kumar
14 October 2021, 11:42 pm
Quick Share

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா 11 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கடந்த வருடம் அரசின் வழிகாட்டுதலின்படி கோவிலின் உள்ளே மற்ற நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட எந்த தடையும் இல்லை. அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா..?? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Views: - 240

1

0