குமரியில் தொடர் செயின் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது.! 117 கிராம் நகைகளை மீட்டு போலீசார் அதிரடி

20 April 2021, 6:45 pm
arrest kumari - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: செயின் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை குமரி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செயின் பறிப்பு, வீட்டை உடைத்து திருட்டு என சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து குளச்சல் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையில் குளச்சல் காவல் ஆய்வாளர் தராஜகுமாரி, உதவி ஆய்வாளர் தசணல் குமார், தனிப்படை உதவி ஆய்வாளர் ஜாண்போஸ்கோ மற்றும் காவலர்கள் சகிதம் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் லட்சுமிபுரம் சந்திப்பில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டுடிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மேக்காமண்டபத்தை சேர்ந்த அபிராம்(27) மற்றும் பரம்பை பகுதியை சேர்ந்த கிருஷ்னகுமார் (43) என்பது தெரியவந்தது. இவர்கள் செயின் பறிப்பு, வீட்டை உடைத்து திருட்டு என பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் திருடிய சுமார் 8 லட்சம் மதிப்பிலான 117 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 77,000 மீட்கப்பட்டது.தொடர்ந்து திருடர்கள் மீது குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Views: - 83

0

0