அகழாய்வில் கண்டறியப்பட்ட முதல் உறை கிணறு..!!

7 August 2020, 5:13 pm
Keeladi Well Found - Updatenews360
Quick Share

மதுரை : கீழடி அருகேயுள்ள அகரம் அகழாய்வில் முதல் முறையாக உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறைகளின் சார்பாக மதுரை அருகே அமைந்துள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வில் இந்திய தொல்லியல் துறையும் நான்கு ஐந்தாம் கட்ட அகழாய்வில் தமிழக தொல்லியல் துறையும் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக தொல்லியல்துறை ஆறாம் கட்ட அகழாய்வினை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த முறை கீழடி மட்டுமன்றி கொந்தகை அகரம் மணலூர் ஆகிய சுற்றியுள்ள பகுதிகளிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஐந்து கட்ட அகழாய்வுகளிலும் உறைகிணறுகள் கண்டெடுக்கப்பட்டன. 6ஆம் கட்டமாக நடைபெறும் ஆய்வில் இதுவரை உறை கிணறுகள் கண்டறியப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக அகரம் பகுதியில் உறை கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 3 மீட்டர் ஆழத்தில் ஐந்து அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. மேலும் ஆழமாக தோண்டப்படும்போது அதன் முழு வடிவமும் தெரியவரும்.

சங்க இலக்கியங்களில் உறை கிணறுகள் குறித்த பல்வேறு பாடல்கள் காணப்படுகின்றன.’ பறழ்ப்பன்றிப் பல்கோழி
உறைக்கிணற்றுப் புறஞ்சேரி மேழகத் தகரொடு சிவல் விளையாட’ என்று சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0