தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

10 November 2020, 4:28 pm
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

chennai rain 4 - updatenews360

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக கடலோரம் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 19

0

0