இன்றுதான் என் வாழ்வின் கடைசி நாள்… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட மெடிக்கல் ரெப்..!!!

Author: kavin kumar
2 October 2021, 6:43 pm
SUICIDE_UpdateNews360
Quick Share

சென்னை: மாதவரம் அருகே இன்று ஒரு நாள் மட்டும் தான் நான் உயிரோடு இருப்பேன் என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு மெடிக்கல் ரெப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் அடுத்த அம்பேத்கார் நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் ஜான்சன் வயது 25. இவர் சென்னை பாடியில் உள்ள தனியார் மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மெடிக்கல் ரெப்பாக பணிபுரிந்து வந்தார். இவருடைய பெற்றோர் மாதவரம் பால்பண்ணை அருகே வசித்து வருகின்றனர். தனது தாயாரிடம் வேலைக்கு செல்வதாக செல்போனில் கூறி மதிய உணவு செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் ஜான்சனுடன் பணிபுரியும் ராஜேஷ் என்பவர் ஜான்சனின் அண்ணன் சாமுவேலை செல்போனில் தொடர்பு கொண்டு ஜான்சன் வாட்ஸ் அப்பில் ஸ்டேடசில் இன்று ஒரு நாள் மட்டும் நான் உயிரோடு நான் இருப்பேன் என வைத்திருப்பதாகவும் இன்று ஜான்சன் வேலைக்கு வரவில்லை எனவும் தகவல் அளித்துள்ளார்.

விபரமறிந்த சாமுவேல் பதறியபடி உடனே வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கே படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு ஜான்சன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் இதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 304

0

0