மாறுவார் என நினைத்தேன்… மாறவில்லை.. கமலை காரணம் காட்டி ம.நீ.ம.வில் இருந்து வெளியேறிய மகேந்திரன்..!!

6 May 2021, 8:14 pm
kamal - mahendran - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியடைந்த நிலையில், பல்வேறு காரணங்களை சொல்லி, அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் ராஜினாமா செய்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ நிர்வாகக்‌ குழு கூட்டம்‌ கட்சியின்‌ தலைவர்‌ கமல்‌ஹாசன்‌ தலைமையில்‌ இன்று கட்சியின்‌ தலைமை அலுவலகத்தில்‌ நடைபெற்றது. அதில்‌ கலந்துகொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர்‌ ஆர்‌. மகேந்திரன்‌, எம்‌. முருகானந்தம்‌, மெளரியா ஐபிஎஸ்‌ (ஓய்வு), தங்கவேல்‌, உமாதேவி, சி.கே.குமரவேல்‌, சேகர்‌, சுரேஷ்‌ அய்யர்‌ (தேர்தல்‌ வியூக அலுவலகம்‌) ஆகியோர்‌ தங்களது ராஜினாமா கடிதங்களைக்‌ கொடுத்தனர்‌. இது மக்கள் நீதி மய்யம் கட்சியினி தலைவர் கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கட்சியில் இருந்து விலகுவதற்கு பல்வேறு காரணங்களை கூறி அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது :- மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ துணைத்தலைவர்‌ டாக்டர்‌.ஆர்.மகேந்திரன்‌ ஆகிய நான்‌ கனத்த இதயத்துடனும்‌, தெளிவான சிந்தனையுடனும்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ தெரிவித்துக்கொள்வது, நான்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன்‌. இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான்‌ இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ அனைவருக்கும்‌ தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும்‌ பொறுப்பும்‌ ஆகும்‌.

நான்‌ ஏன்‌ இப்பொழுது கட்சியில்‌ இருந்து விலகுகிறேன்‌ என்பதற்கான விரிவான காரணத்தை உங்கள்‌ அனைவரிடமும்‌ இத்துடன்‌ ஒரு விளக்க கடிதத்தை இணைத்துள்ளேன்‌. மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுத்திருக்கின்றேன்‌.

கட்சியின்‌ இத்துணை பெரிய தோல்விக்குப்‌ பிறகும்‌, தனது தோல்விக்குப்‌ பின்னரும்‌, தலைவர்‌ அவர்கள்‌ தனது அணுகுமுறையில்‌ இருந்த மாறுபட்டு செயல்படுவதாக எனக்குத்‌ தெரியவில்லை, மாறிவிடுவார்‌ என்கின்ற நம்பிக்கையும்‌ இல்லை. எனக்குத்‌ தெரிந்த தலைவர்‌ கமல்‌ஹாசன்‌, கொள்கைக்காகவும்‌, எளிய தொண்டர்களுக்கு
தோழனாகவும்‌, அனைத்து நல்ல தலைமைப்‌ பண்புகளையும்‌ கொண்ட நம்மவராக மறுபடியும்‌ செயல்பட வேண்டும்‌ என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்‌.

தலைவர்‌ கமல்‌ ஹாசன்‌ அவர்களால்‌ நான்‌ அரசியலுக்குள்‌ அடியெடுத்து வைத்திருந்தாலும்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின்‌ உற்சாகமும்‌ உத்வேகமும்‌ தான்‌ என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில்‌, இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை கொடுத்தது. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்‌.

அரசியல்‌ எனும்‌ விதையை, எனக்குள்‌ விதைத்த தலைவர்‌ கமல்‌ஹாசன்‌ அவர்களுக்கு என்‌ மனமார்ந்த நன்றிகள்‌.
மக்கள்‌ சேவையை எங்கிருந்து செய்தாலும்‌, காந்தியார்‌ சொன்னது போல்‌ “நீங்கள்‌ பார்க்க விரும்பும்‌ மாற்றமாக இருங்கள்‌,” என்பதற்கேற்ப சிறப்பாகவும்‌ அறத்துடனும்‌ செயல்படுவேன்‌ என்ற உறுதியுடன்‌ மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியில்‌ இருந்து விடைபெறுகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 211

0

0