‘எங்ககிட்டயே காசு கேக்கறீயா‘ : ஓட்டல் ஊழியர்களை தாக்கிய மர்மநபர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2021, 1:41 pm
Hotel Staff attacked - Updatenews360
Quick Share

தருமபுரி : அரூரில் உள்ள தாபா ஓட்டலில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம், அரூரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லம்ப்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவர் நியூ பஞ்சாபி தாபா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை அரூர் பழைய பேட்டையை சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.

அவர்கள் கேட்ட அனைத்து உணவுகளையும் வழங்கிய பிறகு உணவுக்கான தொகை எவ்வளவு என்று ஊழியரிடம், கேட்டபோது 500 ரூபாய் பில் கொடுங்கள் என்று ஊழியர் சொல்லியபோது. நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா, என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று ஊழியர்களை மீது அந்த நபர்கள் தாக்கி உள்ளனர்.

இதனை தடுக்க சென்ற பெண்களையும் தாக்கி ஓட்டல்களில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தினர். ஊழியர்களை தாக்கும் வீடியோ ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது அந்த வீடியோ சமூக வலையதளங்களில் பரவி வருகிறது.

ஓட்டல் ஊழியர்கள் இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை தாக்கிய சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்க சார்பில் அரூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Views: - 218

0

0