உயிரை மாய்த்த மாணவனின் உடலை வாங்க மறுப்பு!! மாணவனின் பெற்றோர் உருக்கம்!!

13 September 2020, 2:31 pm
Dharmapuri Neet Suicide - Updatenews360
Quick Share

தருமபுரி : நீட் தேர்வு எழுத இருந்த மாணவன் தற்கொலை செய்த கொண்டவரின் உடலை பெற்றோர் கையெப்பம் இல்லாமல் அவரச அவரசமாக மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்சில் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், ஜெயசித்ரா தம்பதியினரின் ஒரே மகன் ஆதித்யா. இவர் 2018 ஆம் ஆண்டு பணிரெண்டாம் முடித்துவிட்டு கடந்தாண்டு நீர் தேர்வு எழுதி உள்ளார்.

அதில் அவர் தோல்வியுற்றதால் இன்று சேலத்தில் நடைபெறும் நீர் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுந்த இருந்தார். இந்நிலையில் நீட் தேர்வு பயத்தால் அரவது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பட்டது.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் நீட் தேர்வை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும், இறந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே உடல் கூறு ஆய்வு செய்ய கையெப்பம் இடுவோம் என கூறியிருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் மாணவனின் உடலை பார்த்து மாலை அணிவித்துசென்ற பிறகு பெற்றோர் அனுமதியில்லாமல் இறந்த மாணவனுக்கு உடல் கூறு ஆய்வு செய்து உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர்.

இதற்கு பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் அரசு ஆம்புலன்சில் மாணவனின் உடலை வைத்து மருத்துவனை வளாகத்திலியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சம்பதம் இல்லாமல் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு உடலை வெளியே கொண்டு வந்து ஆம்புலன்சில் வைத்துள்ளதால் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே உடலை வாங்குவோம் என மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர் பிரேத பரிசோதனை கூடத்தின் முன்பு அமர்ந்துள்ளனர்.

Views: - 0

0

0