பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு புதிய வகை கொரோனாவா? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!

22 December 2020, 10:54 am
Chennai New Corona - Updatenews360
Quick Share

சென்னை : பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தாக்கம் அடங்கிய நிலையில் மீண்டும் பிரிட்டனில் புதிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பழைய தொற்றை விட வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டன் நாட்டுடன் விமான போக்குவரத்து சேவையை இந்தியா ரத்து செய்துள்ளது.

இந்தநிலையில் இன்று, பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரேதானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணியை தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்த போது தொற்று உறுதியானது.

பரிசோதனை செய்யப்பட்ட பயணியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புதிய வகை கொரோனா பரவியுள்ளதாக என பரிசோதனை செய்து வருகின்றனர். அவருடன் பயணம் செய்த மற்ற பயணிகளை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த பயணிக்கு புதிய வகை கொரோனா பரவியுள்ளதாக என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட் உள்ளதாகவும், இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Views: - 1

0

0