“நிவர்“ புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

23 November 2020, 10:35 am
Pondy Strom - Updatenews360
Quick Share

புதுச்சேரி : புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்ககடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் புதுச்சேரி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்களின் படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

Views: - 0

0

0