மெய்சிலிர்க்க வைக்கும் நம்ம சென்னை செல்பி கார்னர் : அறிமுகப்படுத்தினார் எடப்பாடியார்!!
28 January 2021, 2:19 pmசென்னை : சென்னையின் மாண்பினை போற்றும் வகையில் காமராஜர் சாலையில் நம்ம சென்னை செல்பி கார்னரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை ராணி மேரி கல்லூரி எதிரில் அமைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை என்ற செல்பி மையத்தை மாநகராட்சி சார்பில் புனரமைக்கப்ப்டடது. சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது.
சென்னைக்கு அடையாள சின்னமாக விளங்குவதுடன், தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மெரினாவுக்கு வந்து செல்வதால் இங்கு செல்பி எடுத்து மகிழும் வகையில் இந்த செல்பி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செல்பி மையத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதே போல சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள ரூ.9.50 கோடி மதிப்பில் இ-பைக் திட்டத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கவும், மின்சார சார்ஜில் இயங்கும் தன்மையும் இந்த இ-பைக் திட்டம் கொண்டுள்ளது.
0
0