நெற்றியில் முதலமைச்சரின் படம் வரைந்த ஆசிரியர்..!! பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!!

11 November 2020, 12:33 pm
eps - photo - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி நெற்றியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை வரைந்து ஆசிரியர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் (40). இவர், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி வலியுறுத்தி, அரசின் கவனத்தை பெறும் முயற்சியாக, தனது நெற்றியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை 20 நிமிடங்களில் வாட்டர் கலர்கொண்டு வரைந்தார்.

இது தொடர்பாக பேசிய ஆசிரியர் செல்வம், கடந்த 2012ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் (16 ஆயிரம் பேர் ) பத்தாண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறினார். இந்த பகுதி நேர ஆசிரியர் பணிக்கு மாத ஊதியம் ரூ.7,700 தருவதாகவும், குறைந்த ஊதியத்தினால் வாழ்வாதாரம் தற்போது பெரும் கடினமாக இருப்பதாகக் கூறிய ஆசிரியர் செல்வம், எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தங்களின் தாழ்மையான வேண்டுகோள் எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 35

0

0