என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் : புதுச்சேரி பாஜக!!

4 March 2021, 3:49 pm
pondy bjp - updatenews360
Quick Share

புதுச்சேரியில் கூட்டணி குறித்து என். ஆர் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாஜக – என்ஆர் காங்கிரஸ் அதிமுக கூட்டணியானது தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. மூன்று கட்டமாக பாஜகவிற்கும், என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற சூழ்நிலையில், இதுவரை தொகுதி பங்கீடு குறித்து உறுதி செய்யப்படவில்லை, இதனால் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து என். ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ் சந்திரசேகர் எம்பி, மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதில், புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் இடங்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறக்கூடிய அறிவிப்புகள், தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு பின்பு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது வரை கூட்டணி தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறி அவர்கள், கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பது குறித்து நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், தெரிவித்தனர்.

Views: - 10

0

0