தமிழக அரசுப் பள்ளி தலைமையாசிரியரை பாராட்டிய பிரியங்கா சோப்ரா!

22 August 2020, 6:14 pm
Priyanka Chopra- Updatenews360
Quick Share

முன்னாள் உலக அழகியும் திரைப்பட நடிகையுமான பிரியங்கா சோப்ரா தமிழக அரசு பள்ளி ஆசிரியரை பாராட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் முதல் முறையாக தமிழ் திரைப்படான தமிழன் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தார். பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என ரேஞ்சே மாறியது.

ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடிக்கும் போது அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து பின்னர் கரம் பிடித்தனர். அமெரிக்காவில் இருந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியா தொடர்பான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை வெகுவாக பாராட்டியுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரசு பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் என்பவர் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதிய செல்போன்களை பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, செல்போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாத குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த சேவை பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பார்த்த நெட்டிசன்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் தலைமையாசிரியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.