முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் : புதுச்சேரியில் பரபரப்பு!!

16 September 2020, 2:41 pm
Pondy CM Mutrugai - updatenews360
Quick Share

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரி முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1,311 ஊழியர்கள் வவுச்சர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து தினக்கூலி ஊழியர்களாக மாற்றம் செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றாத நிலையில் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணாவில்
ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடுப்புகளைள அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தர்ணாவில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைளை வலியுறுத்தியும், முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் வழிகாட்டியாக கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0