கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி மூட்டைகள் : காவலரை கீழே தள்ளி விட்டு ஓட்டுநர் தப்பியோட்டம்!!

5 November 2020, 2:16 pm
Ration Rice Siezed - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழக கேரள எல்லை களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு லாரியில் உப்பு மூட்டைகளுக்கு இடையே பதுக்கி கேரளாவிற்கு கடந்த முயன்ற 14 ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருதபோது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்திய போது ஓட்டுனர் லாரியில் இருந்து இறங்கி தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றி வருவதாக தெரிவித்து உள்ளார்.

வாகனத்தை போலீசார் சோதனை செய்ய முயற்சி செய்த நேரத்தில் திடீரென போலீசாரை தரையில் தள்ளி விட்டு ஓட்டுனர் ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து சுமார் இரண்டு கிலோமீட்டர்தூரம் போலீசார் துரத்தியும் அவனை பிடிக்க முடியவில்லை லாரியை சோதனை செய்தபோது உப்பு மூட்டைகளுக்கு அடியில் சுமார் 14 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பறிமுதல் செய்யபட்ட லாரி மற்றும் அரிசியை உணவுகடத்தல் தடுப்பு போலீசாரிடம் களியக்காவிளை போலீசார் ஒப்படைத்தனர்.

Views: - 25

0

0