புதுச்சேரியில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை: ரூ.40 ஆயிரம் கொள்ளை…மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 4:05 pm
Quick Share

புதுச்சேரி: திருமண மண்டபம் உள்பட 10க்கும் மேற்பட்ட கடைகளில் ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்குட்பட்ட விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு கல்யான மண்டபம் அலுவலக கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்து. இதேபோல், அதே பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இரண்டு கடைகளில் 10 ஆயிரம் ரூபாய் அளவிலான பணம் திருடபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கல்யான மண்டப மேலாளர் மற்றும் கடையின் உரிமையாளர்கள் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கையில் இரும்பு கம்பியுடன் கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததை அடுத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 266

0

0