எஸ்.பி.பி உடல்நிலை குறித்து எஸ்.பி.பி சரண் கூறிய தகவல் : வீடியோ வெளியீடு!!

10 September 2020, 7:01 pm
SPB OK - updatenews360
Quick Share

சென்னை : எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டுவர வேண்டும் என உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.

இதனை தொடர்ந்து நாள்தோறும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.இந்த சூழலில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி-யின் உலல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று முழுவதும் குணமடைந்து நெகட்டிவ் முடிவு வந்ததாக கடந்த திங்கட்கிழமை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அனுப்பியது.

இந்நிலையில் அவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தந்தையை தினமும் பார்த்து வருவதாக எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Views: - 0

0

0