திருப்பூரில் ஆட்சியரின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகள் : நேரில் சென்று எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 2:13 pm
Tirupur Warn- Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் கடைகளை அடைக்க கூறி நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கட்டுப்பாடுகளுடன் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். திருப்பூர் பல்லடம் நகராட்சியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளையும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜீ.ஆர் சாலையில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டிருந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்து நகராட்சி அதிகாரிகள் கடைகளை அடைக்க உத்தரவிட்டனர். அரசு உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரி சங்க நிர்வாகிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 596

0

0