மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி : மேற்கு மண்டல காவல்துறைக்கு 7 பதக்கங்கள்!!

4 February 2021, 5:54 pm
Police Won Medals- Updatenews360
Quick Share

கோவை : மாநில அளவிலான துப்பாக்கி சுடும்ப் போட்டியில் 7 பதக்கங்களை வென்ற போலீசாருக்கு மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா வாழ்த்து தெரிவித்தார்.

மண்டல காவல்துறையினருக்கு இடையிலான துப்பாக்கி சுடும்போட்டிக்கு மேற்குமண்டலத்தில் இருந்து 25 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து 8 மண்டலங்களுக்கு இடையேயான துப்பாகி சுடும் போட்டி காஞ்சிபுரம் டி.என்.சி.எஃப் துப்பாகி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மேற்குமண்டல காவல்துறையை சேர்ந்த போலீசார் 2 தங்க பதக்கங்கள் 5 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில், கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பிரகாஷ், நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் மணி ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.

இந்த போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் ஒட்டுமொத்தமாக மேற்குமண்டல காவல் துறை 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற போலீசாருக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பாராட்டுக்களை தெரிவித்தார்.

Views: - 10

0

0