இளைஞர் கொலையில் திடீர் திருப்பம் : 6 பேர் கைதாகியுள்ள நிலையில் திமுக பிரமுகருக்கும் தொடர்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 6:44 pm
Dmk Executive Arrest - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்துள்ள நிலையில் திமுக கிளை செயலாளர் இன்பராஜூவிடம் கொலையில் தொடர்பு உள்ளதாக கூறி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். இவரை கடந்த 22ஆம தேதி ஒரு கும்பல் மட்டப்பாறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்தது.

பின்னர் தலையை மட்டும் துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வீசிச் சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீசார் உடல் மற்றும் தலையை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய தேடுதல் வேட்டையில், அனுமந்தராயன் கோட்டை அருகில் உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன், கார்த்திகேயன், சங்கரபாண்டி மார்தீஸ்வரன், ராம்குமார், மணிகண்ட ராஜன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இதில் பிடிபட்ட மன்மதன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் கால்முறிவு ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மதன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வழக்கில் பிடிபட்ட 5 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 11,500 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட திமுக கிளை செயலளார் இன்பராஜ், ஸ்டீபன் கொலை வழக்கில் கூட்டுசதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் இன்பராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 368

0

0