கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Author: Rajesh
29 January 2022, 1:40 pm
Quick Share

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி தனியார் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கார்த்திக்குமார் தனது நண்பர்களிடம் 2ம் ஆண்டு பாட புத்தகம் படிப்பதற்கு சிரமமாக உள்ளதாக என கூறி வந்துள்ளார். அதற்கு இவரது நண்பர்கள் போக போக சரியகிவிடும் கவலைப்பட வேண்டாம் என சமாதாம் செய்துள்ளனர்.

ஆனாலும் கார்த்திக் குமார் தேர்வில் தோல்வியடைந்து டாக்டராக முடியாமல் போய்விடுமோ என அச்சத்தில் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த கார்த்திக் குமார் தனது நண்பர்களிடம் அறைக்கு சென்று நோட்டு புத்தகத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

ஆனால் அவர் வெகு நேரமாகியும் கல்லூரிக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது கார்த்திக்குமார் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து கார்த்திக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 1489

0

0