மின்சாரத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

4 May 2021, 8:20 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு விட்டது. அதேபோல, தங்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு மே 31 ஆம் தேதி வரை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 80

0

0

Leave a Reply