கோவையில் கொட்டித்தீர்த்த மழை: நேற்று பெய்த மழை அளவு தெரியுமா?
Author: Aarthi Sivakumar9 October 2021, 10:12 am
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு, சின்கோனா 48 மில்லி மீட்டர், சின்னக்கல்லார் 55 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகள் 51 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வால்பாறை தாலுக்கா 50 மில்லி மீட்டர், சோலையார் 47 மில்லி மீட்டர், ஆழியார் 10.4 மில்லி மீட்டர், மேட்டுப்பாளையம் 2 மில்லி மீட்டர் என மொத்தம் 269.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக நேற்று 19.25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்றும் கோவையில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
0
0