பாஜகவில் திருமாவளவன் இணையும் நாள் தமிழ் மண்ணில் உருவாகும்: பாஜக கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

9 November 2020, 11:01 pm
Quick Share

வேலூர்: பாஜகவில் திருமவளவன் இணையும் நாள் தமிழ் மண்ணில் உருவாகும் என்றும, ஜாதி அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் ஆப்பு வைப்பதாகவும், பாஜக கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,வேலூர் மண்டிவீதியில் பாஜக சார்பில் வேல் யாத்திரை குறித்த கூட்டம் தடையை மீறி பாஜக மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஜெகன் ,சரவணன் ,மகளிரணி மாநில செயலாளர் கார்த்தியாயினி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக கயிறுவாரிய தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், நான் தமிழக முதல்வர் பழனிசாமியை பார்த்து கேட்க விரும்புவது ஒன்றுதான் நீங்கள் மாவட்டம் மாவட்டமான செல்கிறீர்கள். அங்கு மக்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.

அங்கு 10 ஆயிரம் பேர் கூடுகிறார்கள். ஆனால் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார் பாஜக யாத்திரை தடைக்கு காரணம் கொரோனா பரவிவிட கூடாது என. ஆனால் பாஜகவின் நோக்கம் தமிழக அரசியலில் உள்ள கொரோனாக்களை அகற்றுவது தான். திருமாவளவன் பெரியார் பெயரை சொல்லி ஜாதி மறுப்பு அரசியல் இயக்கம் நடத்துவதாக சொல்கிறவர் ஜாதி அரசியல் செய்கிறார். தலைவர் முருகன் அவர்கள் அந்த அடிப்படை வாதத்திற்கு ஆப்பு வைக்கும் அரசியல் தலைவராக உள்ளார்.

காலம் மாறிவிட்டது திருமாவளவன் பாஜக இணையும் நாள் தமிழ் மண்ணில் உருவாகுமே தவிர தாமரையை வீழ்த்துகின்ற சக்தி என்றைக்கும் உருவாகாது என்று பேசினார். பின்னர் பேட்டி அளித்த அவர், பாஜக வின் ஆணிவேரை தமிழ் மண்ணில் இருந்து அகற்ற சில சக்திகள் முயற்ச்சிக்கின்றன அரசியல் கட்சிகள் அதர்க்கு துணைபோகின்றது அதை தகர்ப்பதர்க்குதான் இந்த ரத யாத்திரை இது யாருக்கும் எதிரானது அல்ல என்றார்.பின்னர் தடையை மீறி கூட்டம் நடத்தியதற்காக பாஜகவினர் 700-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 23

0

0